தொடுவானம் தொடாத விரல்

October 2, 2009

மழையிரவில் உலகம்..

உடல் மழையான
இரவில்,
உயிர் மேகமான
இரவில்,
நீநான்நீநான்
நான்நீநான்நீ…
இருள் வெள்ளத்தில்
உலகமே
ஒரு
முத்தம் போலானது..

Advertisements

April 24, 2009

போடி(டா) லூசு.. உன்னைப்போல ஒரு கவிதை!!!-2.

“நான் பைத்தியந்தான்..”
என்றபடி
என் தலைமுடி
கலைத்தாய்,
கன்னத்தில்
ஓங்கி அடிப்பதாக அடித்தாய்,
தோளில்
மென்கரத்தால்
பலங்கொண்டு குத்துவதாக குத்தினாய்,
பிராண்டி
விடுவதாய் விரல்களை
கொக்கி போலாக்கி,
அழகான முகத்தை
கசக்கிய காகிதமாக்கி,
பச்சரிசி பற்களை
மோகினியாக  காட்டி,
சங்கீதக் குரலில்
அபஸ்வரம் பிடித்து,
மூச்சடக்கி
பூந்தண்டு
கழுத்தில்
பச்சை நரம்புகள்
புடைக்க
சிலைபோல காற்றில்
இமைக்க மறந்தாய்….
உன்னை பைத்தியமாக்கிய
“நானும் பைத்தியந்தான்..”
என்றபடி…உன்..

April 5, 2009

காதல் யோகம்…!!!

Filed under: காதல்,முத்தம் — கண்ணன் பெருமாள் @ 10:55 am
Tags: ,

சலித்துவிட்டோம்,
என் கவிதைகளை
நீ
வாசிப்பதில்லை,
உன்  கன்னங்களை
நான்
முத்தமிடுவதில்லை..!
கவிதைகளோ,
கன்னமோ
காதல் எப்போதும்
மதுவைபோலத்தான்…!
நாள்ப்பட
போதை ஏறுவதில்லை..
நாள்ப்பட
வலியே தெரிவதில்லை…!
எழுதவில்லை
நான் வாசிக்கிறேன்…
வாசிக்காதே
நீ முத்தங்கொடு…!!!

Create a free website or blog at WordPress.com.