It was but yesterday I thought myself a fragment quivering without rhythm
in the sphere of life.
Now I know that I am the sphere, and all life in rhythmic fragments moves within
me.
நேற்று நான் இந்த பிரபஞ்சத்தின் லயமற்று
துடிக்கும் ஒரு துளியாக என்னை எண்ணினேன்;
ஆனால் இக்கணம் நான்தான் பிரபஞ்சம்,எல்லா உயிர்களும் நானே;
They say to me in their awakening, “You and the world you live in are but a grain
of sand upon the infinite shore of an infinite sea.” And in my dream I say to them,
“I am the infinite sea, and all worlds are but grains of sand upon my shore.”
அவர்கள் விழித்திருக்கும்போது சொன்னார்கள்,
” நீ இந்த உலகில், முடிவில்லாத
பெருங்கடலின் கரையிலிருக்கும் ஒரு மணல் துகள்”.
அவர்களுக்கு பதில் என் கனவிலிருந்து
“நான் ஒரு பெருங்கடல், எல்லா உலகங்களும் என்
கரையின் மணல் துகள்கள்”.
Only once have I been made mute. It was when a man asked me,
“Who are you?”
என் வாழ்வில் ஒரே ஒரு முறைதான் பேச்சற்றுப் போனேன்.
“நீ யார்?” என என்னை ஒருவன் கேட்டபொழுது.
The first thought of God was an angel.
The first word of God was a man.
ஒரு தேவதைதான் கடவுளின் முதல் எண்ணம்.
ஒரு மனிதன்தான் கடவுளின் முதல் வார்த்தை.
We were fluttering, wandering, longing creatures a thousand thousand
years before the sea and the wind in the forest gave us words.
Now how can we express the ancient of days in us with only
the sounds of our yesterdays?
நாம் அமைதியிழந்து, ஏக்க பெருமூச்சுடன்
யுகயுகமாய் இப்பெருங்கடலின்
முன் சுற்றி திரிந்தோம்;
பின் கானகத்திலிருந்து வார்த்தைகள்
வந்தது காற்றுதான் தந்தது.
ஒராயிம் வருட ஆசைகளை
நேற்று பிறந்த ஒசைகளால் எப்படி சொல்வது?
நுரைக்கும்…
