தொடுவானம் தொடாத விரல்

June 7, 2008

மணலும் நுரையும் (SAND AND FOAM)–கலீல் கிப்ரான

The Sphinx spoke only once, and the Sphinx said,
“A grain of sand is a desert, and a desert is a grain of sand;
and now let us all be silent again.” I heard the Sphinx,
but I did not understand.

ஸ்பிங்க்ஸ் ஒருமுறை சொன்னது,
“ஒரு மணல் துகளே ஒரு பாலைவனம்; ஒரு பாலைவனம்
ஒரு மணல் துகள். நீ அமைதியாயிரு.”ஸ்பிங்க்ஸ்
சொன்னதை கேட்க முடிந்த என்னால் உணர முடியவில்லை.

Long did I lie in the dust of Egypt, silent and unaware of the seasons.
Then the sun gave me birth, and I rose and walked upon
the banks of the Nile, Singing with the days and dreaming
with the nights. And now the sun threads upon me with a
thousand feet that I may lie again in the dust of Egypt.
But behold a marvel and a riddle! The very sun that gathered
me cannot scatter me. Still erect am I, and sure of foot
do I walk upon the banks of the Nile.

நான் எகிப்தின் புழுதிகளில் மௌனமாக,கால மாற்றங்களை
பற்றி எந்தவொரு பிரக்ஞை இல்லாமல் இருந்தேன்.
பகலவன் என்னை பிரசவித்தான்,
நைலின் கரைகளில் நனைந்தேன்,
பகல் எக்காளமாகவும்;இரவு கனாகாலமாகவும் கழிந்தன.
சூரியனின் சுடுகரங்கள் என்னை சுட்டெரிக்க
நீண்டபொழுது அந்த பேரதிசயம் பூத்தது.
ஆக்கியவனால் என்னை அழிக்க முடியவில்லை.
நான் புதுப்புனலாய் நைலோடு நடை பயின்றேன்.

Remembrance is a form of meeting.
Forgetfulness is a form of freedom.

நினைவு என்பது சந்திப்புதான்.
மறத்தல் ஒரு வகையில் சுதந்திரம்.

We measure time according to the movement of countless suns;
and they measure time by little machines in their little pockets.
Now tell me, how could we ever meet at the same place and
the same time?

நமது இரவு,பகல் சூரிய சந்திரர்களின் வருகைதான்.
அவர்களிடம் காலம் கணிக்க கருவிகள் இருக்கின்றன.
இருந்தும்,அவர்களால் அதே இடத்தில்,அதே வேளையில்
மற்றுமொருமுறை சந்திக்க முடியுமா?

Space is not space between the earth and the sun to one who
looks down from the windows of the Milky Way.

பால்வெளியின் பலகணியில் இருந்து பார்ப்பவனுக்கு
விண்வெளி என்பது பூமிக்கும்,சூரியனுக்குமான
இடைவெளி அல்ல என்பது தெரியும்.

நுரைக்கும்…

June 3, 2008

மணலும் நுரையும் (SAND AND FOAM )–கலீல் கிப்ரான்

It was but yesterday I thought myself a fragment quivering without rhythm
in the sphere of life.
Now I know that I am the sphere, and all life in rhythmic fragments moves within
me.

நேற்று நான் இந்த பிரபஞ்சத்தின் லயமற்று
துடிக்கும் ஒரு துளியாக என்னை எண்ணினேன்;
ஆனால் இக்கணம் நான்தான் பிரபஞ்சம்,எல்லா உயிர்களும் நானே;

They say to me in their awakening, “You and the world you live in are but a grain
of sand upon the infinite shore of an infinite sea.” And in my dream I say to them,
“I am the infinite sea, and all worlds are but grains of sand upon my shore.”

அவர்கள் விழித்திருக்கும்போது சொன்னார்கள்,
” நீ இந்த உலகில், முடிவில்லாத
பெருங்கடலின் கரையிலிருக்கும் ஒரு மணல் துகள்”.
அவர்களுக்கு பதில் என் கனவிலிருந்து
“நான் ஒரு பெருங்கடல், எல்லா உலகங்களும் என்
கரையின் மணல் துகள்கள்”.

Only once have I been made mute. It was when a man asked me,
“Who are you?”

என் வாழ்வில் ஒரே ஒரு முறைதான் பேச்சற்றுப் போனேன்.
“நீ யார்?” என என்னை ஒருவன் கேட்டபொழுது.

The first thought of God was an angel.
The first word of God was a man.

ஒரு தேவதைதான் கடவுளின் முதல் எண்ணம்.
ஒரு மனிதன்தான் கடவுளின் முதல் வார்த்தை.

We were fluttering, wandering, longing creatures a thousand thousand
years before the sea and the wind in the forest gave us words.
Now how can we express the ancient of days in us with only
the sounds of our yesterdays?

நாம் அமைதியிழந்து, ஏக்க பெருமூச்சுடன்
யுகயுகமாய் இப்பெருங்கடலின்
முன் சுற்றி திரிந்தோம்;
பின்  கானகத்திலிருந்து வார்த்தைகள்
வந்தது காற்றுதான் தந்தது.
ஒராயிம் வருட ஆசைகளை
நேற்று பிறந்த ஒசைகளால்  எப்படி சொல்வது?

நுரைக்கும்…

June 2, 2008

மணலும் நுரையும் (SAND AND FOAM )–கலீல் கிப்ரான்

I am forever walking upon these shores,
Between the sand and the foam,
The high tide will erase my foot-prints,
And the wind will blow away the foam.
But the sea and the shore will remain Forever.

நான் இந்த கரைகளில் மணலுக்கும்,நுரைக்கும்
இடையே எப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறேன்
உயர்ந்த அலைகள் என் காலடித்தடங்களை அழித்துவிடும்,
அதுபோலவே காற்று நுரையினை அடித்து சென்று விடும்.
ஆனால் இந்த கடலும்,கரையும் எப்பொழுதும் இருக்கும்.

Once I filled my hand with mist.
Then I opened it and looked, the mist was a worm.
And I closed and opened my hand again, and behold there was a bird.
And again I closed and opened my hand, and in its hollow stood a man with a
sad face, turned upward.
And again I closed my hand, and when I opened it there was naught but mist.
But I heard a song of exceeding sweetness.

ஒருமுறை பனிப்புகையை என்கைகளில் ஏந்தியிருந்தேன்.
கைகளை விரித்து பார்த்தபோது பனிப்புகை ஒரு புழுவாய் இருந்தது
மீண்டும் கைகளை மூடி திறந்தபோது ஒரு பறவையை பார்த்தேன்.
திரும்பவும் கைகளை மூடி திறந்தபோது அதனிடுக்கில் கவலை நிறைந்த முகத்துடன்
மேல்நோக்கி பார்த்தபடி ஒரு மனிதன் இருந்தான்.
நான் மீண்டும் கைகளை மூடி, திறந்தபொழுது அங்கே பனிப்புகையை தவிர ஒன்றுமில்லை.
ஆனால் இனிமையிலும் இனிமையான ஒரு கானத்தை நான் கேட்டேன்.

நுரைக்கும்…

Create a free website or blog at WordPress.com.