
The Unflied - Courtesy:Twilight Fairy
எந்தப் பறவையையும்
அழைத்ததில்லை,
அருகே
அமர்ந்திருக்கச் சொன்னதில்லை,
கூட்டை விட்டு
வெளி இறக்கியதில்லை,
பறவைகள் பார்த்திருக்கிறேன்..
பறப்பதையும் பார்த்திருக்கிறேன்..
பறவைகள் வேறு,
நான் வேறு..
சிறகுகள்
வானை அறியும்,
மேகங்கள்
மெல்ல விலகும்,
வானும் அறியும்,
வானம் வேறு,
பறவைகள் வேறு..
Leave a Reply