
Courtesy:Vijay Shinde
ஐந்து இரவுகள் உறக்கமில்லை, ஐந்து பகல்கள் பசியில்லை,மனம் ஒரு நொடியும் நிலைகொள்ளவில்லை,இதையா நான் இத்தனை நாட்கள்,மாதங்கள் வருடங்களாய் தேடினேன்? இல்லை நான் தேடியது மகிழ்ச்சியை,அமைதியை, புன்னகையை,உறவுகளை,நட்பை … ஆம் ஆனால் வன்மமும்,வலியும்,ஏமாற்றமும்,துக்கமும்,புறக்கணிப்பும் என்னை துரத்துகின்றனவா? இல்லை என்னை விட்டு விலக முடியாத பெருங்காதலா என்மீது? கிடையாது, தேடும்போது இருக்கிற வேகமும்,விறைப்பும்தான் எல்லாவற்றையும் கொண்டு வருகின்றன.கொடுப்பதில் இருக்கிற சுகம் கேட்பதில் இல்லை,தருவதில் இருக்கும் தாராளம் தரச்சொல்வதில் இல்லை.இன்றும் சொல்கிறேன் எனக்கு வேண்டியதெல்லாம் அன்பும் அமைதியும்தான் சில கணங்கள் என்றாலும் கூட வெறுப்பும் வன்மமும் ஏமாற்றமும் துக்கமும் எனக்கு கசப்பானவைகளாகின்றன,என்றுமே அன்பும்,அமைதியுமே என் இரு கண்களாக இருக்கட்டும்.அன்பே கண்கள்!அன்பே வழி!
Leave a Reply