
ஓயாமல் வீறிடும்
குழந்தை போல
இரவு,
தூக்கமின்றி
என் ஜன்னலின் வழியே
இருளாய் கசிந்தது…!
ஓசையின்றி
அதன் காதுகளில்
உன் பெயரை சொன்னேன்..!
விடியும் வரை
எழுந்திருக்கவில்லை இரவு..!
இரவு குழந்தை,
நீ தாலாட்டு!!!

ஓயாமல் வீறிடும்
குழந்தை போல
இரவு,
தூக்கமின்றி
என் ஜன்னலின் வழியே
இருளாய் கசிந்தது…!
ஓசையின்றி
அதன் காதுகளில்
உன் பெயரை சொன்னேன்..!
விடியும் வரை
எழுந்திருக்கவில்லை இரவு..!
இரவு குழந்தை,
நீ தாலாட்டு!!!
இட்லிக்கு சாம்பார் என தலைப்பிட்டு எழுதினால் கூட ரெண்டு பேர் படிப்பார்கள் எனத்தோன்றுகிறது.அதுவும் ப்லோக் வந்துவிட்ட பிறகு நிறைய பேர் (நான் உட்பட) சும்மா கவிதை என்ற பெயரில் அத்தனை பேரையும் காய வைத்துவிட்டார்கள்.இன்னும் சிலர் முன்னேறி ரஜினி,கமல்,அர்த்த இராத்திரி கனவுகள் என எழுதி ஆள் திரட்டுகிறார்கள்.சில ஆத்மாக்கள் தீபிகா படுகோனே, டோனி என கிரிக்கெட், சினிமா ரெண்டையும் பாலன்ஸ் பண்ணி நெளிய வைக்கிறார்கள்.உண்மையில் இப்படி திசைகளே இல்லாமல் இன்னும் எத்தனை நாள்தான் எழுதுவது.
படித்ததை எழுதினால் வாசிப்பார்களா என தெரியாது அது திருட்டுதான்.சொந்த சமாச்சாரம் இல்லாதவர்கள் சிலர் இப்படி எங்கயாவது உருவி கொண்டு வந்து நம்மிடம் சேர்ப்பது உண்டு.சில இலக்கிய பத்திரிக்கைகள் அயல் நாட்டு எழுத்தாளர்களின் பேட்டியை போட்டு பக்கத்தை நிரப்புவது கூட அப்படித்தானா என சந்தேகம் வருவதுண்டு.துணைக் கண்டத்தில் இலக்கிய தரத்தில் எழுத்து இல்லையா?எழுத ஆள் இல்லையா?.புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் அதற்காக சினிமாக்காரர்கள் ஊட்டியில் எடுத்த ஷூட்டிங்கை நியூசிலாந்திலும், டிவிக்காரர்கள் மெகா சீரியலில் மலேசியாவில் இருக்கும் ஒண்ணு விட்ட தாத்தாவையும் காண்பிக்கிறார்கள்.நானும் சில மொழி பெயர்ப்பு முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.
ரெண்டு நாளைக்கு முன்பு ஓட்டலுக்கு லஞ்ச் சாப்பிட போயிருந்தேன் ரெண்டு பகல் குடியர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.ஒருவன் போதை மிகுதியில் சாப்பிடும் தட்டின் ஓரத்தை ஓங்கி அழுத்தி விடவே சோறும் மோரும் சேர்ந்து ஒரு அபிஷேகம் நடந்து விட்டது.ஓட்டலில் எல்லோரும் அமைதியாகிவிட்டனர்.அவன் அதற்கு பிறகு சாப்பிடவில்லை.எழுந்து பாத்ரூமிற்கு போய் உடலை கழுவி விட்டு வெளியேறிவிட்டான்.எதையாவது மறக்கவோ,மறைக்கவோதான் குடிக்கு அடிமையான பலர் குடிக்கிறார்கள்.ஆனால் குடித்ததும் நினைவுக்கு வருவது அவர் மறக்க அல்லது மறைக்க நினைத்ததுதான்.குடித்ததும் ஆழ்மன உண்மைகள் வெளிவந்தது விடுகிறது.
இந்த recession-ல் அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ந்துவிட்டால் என்னவாகும் என்று சாப்ட்வேர் கம்பனிகள் தலையில் துண்டை போட்டுகொண்டு சுற்றுகின்றன.மென்பொருள் வல்லுனர்களும் subprime market,housing bill-ஐ பற்றியெல்லாம் படித்து விட்டு தூக்கமில்லாமல் சுற்றுகிறார்கள்.சிலர் இதனால் இந்தியாவிற்கு லாபம் என்றும் நிறைய outsourcing இருக்கும் என்றும் கூறி வருகிறார்கள்.எது எப்படியோ நாலு பத்தி வந்துவிட்டது.மீண்டும் குண்டு எதுவும் வெடிக்காமல் இருந்தால் சந்திப்போம்.
நீ
திருநீறும்,
அவள்
சிலுவையும்
தரித்திருக்கிறீர்களா?
நீங்கள் பேசலாம்,
பழகலாம்,
உணவை பகிரலாம்,
வாழ்வை பகிரும்
உரிமையை
உனது ஆகமமோ,
அவளது தேவனோ
அனுமதிக்கவில்லை!
நீ
காரில் செல்கிறாயா?,
உனக்கான தேவதை
ஒருபொழுதும்
சைக்கிளில் வர மாட்டாள்!
நீ
மெத்த படித்தவனா?,
நல்லது,
உன்னளவுக்கு
படிக்காத ஒருத்தியால்
உன்னை சாகும் வரையிலும்
புரிந்த கொள்ள முடியாது!
நீ
நகரங்களில்
தெரு சுற்றியவனா?
கிராமத்து தென்றலை
நீ சுவாசிக்க முடியாது!
எல்லாவற்றுக்கும் மேலாக
நீ
கௌரவமான குடும்பத்திலும்(?)
அவள்
அகௌரவமான குடும்பத்திலும்
பிறந்துவிட்டீர்களா?
அடுத்த பிறவியிலாவது
ஒரே மாதிரியான குடும்பத்தில்
பிறக்க முன்பதிவு செய்யுங்கள்!
இல்லையெனில்
இந்தியாவில்
பிறந்து தொலையாதீர்கள்!

யுகயுகமாய் காதலித்தும்
என்ன பிரயோஜனம்?
என்றுமே
என் அனுமானங்களை
கடந்து விடுகிறது
உன் அன்பு மட்டும்!
உன்னால் மட்டுமே முடிகிறது
ஒன்றிரண்டு வார்த்தைகளில்
உயிரை உறிஞ்சும்படியான
காதலை சொல்ல!
பேனாவை தொடாமல்
நாள் முழுவதும்
கைகட்டியபடியே இருந்தேன்,
உன் அளவில்லாத அன்பால்
அடக்கமில்லாதவனாகிவிட மனமில்லாமல்!
உன் அன்பை
பற்றிக் கேட்டேன்
நீ
ஆகாயத்தை கை காட்டினாய்,
இதற்குப் பெயரும் காதல்தானா?

உன்னால்
என்னை நம்ப முடியவில்லை,
பிறகு
என்னால் என்னை எப்படி நம்புவது?
தொலைபேசியில் கண்டபடி
எண்களை அழுத்திவிட்டு
எப்பொழுதும் அப்பாவிடமே
பேசிக்கொண்டிருக்கும்
குழந்தையைப் போல ஆகிவிட்டேன்;
உன்னைத் தெரிந்தவர்களிடம்
கண்டபடி பேசிவிட்டு,
தெரியாதவர்களிடம் பேசிய
வெட்கமும்,
உன்னிடம் பேசமுடியாத
துக்கமுமாக,
நாளெல்லாம்
வெறுமையில் கரைகிறது!
உன் வெட்கம்
என் பேனாவிற்கும் பிடித்துவிட்டது,
தலை குனிந்த பிறகும்
வார்த்தை மட்டும் வரவேயில்லை!
உன்னை பிடித்திருப்பதால்தான்
நீ தூக்கியெறியும்போதெல்லாம்
பூமாராங் மாதிரி
திரும்பி உன்னிடமே வருகிறேன்!
தூரமாக எறிந்துவிடாதே,
திரும்பி வருவதற்குள்
நீ எங்காவது போய்விடப் போகிறாய்!