தொடுவானம் தொடாத விரல்

மே 7, 2008

கண்களால் கொள்ளை…

கோப்பு வகை: காதல் — kannan824u @ 9:29 பிற்பகல்
Tags:

நீ
பேராசைக்காரி,
உள்ளத்தை கொள்ளையிட்டது
போதாதென்று
இன்னும் ஏன்
ஒளிந்து கிடந்து
பார்க்கிறாய்?

நீ
பெண் வடிவில்
வந்த மாலிக்கபூரா?
உச்சி முதல்
உள்ளங்கால் வரை
அவ்வளவையும்
கண்களாலே
அள்ளிச்செல்கிறாய்?

பெண்களால்தான்
முடிகிறது,
கண்களால்
செய்யும் வித்தையெல்லாம்!
மாயக்காரி,
உனக்கு மந்திரமும்
தெரிந்திருக்கிறது!

காதல் மிகுதியில்
ஏற்கனவே
சிறை எடுத்தவனை
கைது செய்ய,
கண்களோடு ஏன்
காத்திருக்கிறாய்?

நீயேன்
கண்களால் வலைவிரிக்கிறாய்?
நாமிருவரும்
காதல் வலையில்
சிக்கியிருப்பது
தெரியாமல்!

புள்ளி மான்களும்
அசைவமாகி விட்டதா?
நீ கண்களால்
விழுங்கி கொண்டிருக்கும்
இரைதான் எழுதுகிறேன்!

மறுமொழிகள் ஏதும் இல்லை »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.