செவ்வாழையில் கனிந்த முதுமை…
பணிபடர்ததொரு குளிர்காலையில்
கொல்லையிலிருந்த செவ்வாழையை
பார்த்து சிலிர்த்திருந்தேன்,
பின்பு
காட்டு மரங்கள் தேவலாம்
தண்ணீர் ஊற்றி மாளவில்லை,
என்று அலுத்துக்கொண்டேன்!
அருகிருந்தவள்,
கனி தராத மரங்களை
வேரோடு பிடுங்கிட சொன்னாள்,
உடல் நடுங்கியது
கனிகள் தராத மரமும்
உழைப்பை தராத முதுமையும்
ஒரே நேரத்தில் என்னை
அழவைத்தது, உங்களை?
எனக்கு வேண்டாம்
இது போன்றதொரு காலை!
அவளிடம் சொல்லிவிட்டேன்
நீ காபி கொடுக்க
கொல்லைக்கு வராதே என்று!
