நீ இல்லாத தருணங்கள்

 

முகவரி இல்லாத கடிதம்  போல்
அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கிறேன் !

முதல் வாய் சோற்றில் தவறாமல் புரை ஏறுகின்றன
கைபேசி சினுங்கையில் உன்னை மட்டுமே நினைக்கிறேன்

இரவு கசக்கிறது
பகல் நீள்கிறது

இந்த அண்டவெளி முழுவதும்
உன் நினைவுகளால் நிரம்பிஉள்ளன !

ஒரு ரூபாய் காசை தொலைத்த சிறுவனை
உன்னை தேடிக்கொண்டு இருக்கிறேன்
தொலைந்த இடம் தெரியாமல் !

Leave a Comment