என்ன செய்வதாய் உத்தேசம்?
காதலின் முகம்
பார்க்க போனவன்
காதலின்
காலடி தடத்திலேயே
தடம் புரண்டு விட்டான்!
நாமிருவரும்
பேசாமல் இருக்கலாம்
ஆனால் நம்மிடம்
காதல் பேசியபடியே
இருக்கிறதே!
என்ன செய்வதாய்
உத்தேசம்?
சேமித்து வைத்த
முத்தங்களை
செலவு செய்ய
விருப்பமில்லையா?
நான் முசுடுதான்,
அதற்கு
நீ
ஏனடி
முகமூடியணிந்து
சுற்றுகிறாய்?
ஆம்,
எனக்கு பேச
தெரியவில்லை,
இன்றுவரைக்கும்
இதுகூடவா
உனக்கு தெரியவில்லை?
போடி பைத்தியக்காரி,
உன்னை பார்க்க
எத்தனை நாள்
இதயந் தேய
சுற்றியிருக்கிறேன்,
இன்று வராத
குற்றத்தை
இ.பி.கோ என்கிறாய்!
அதெப்படி
உன்னால் முடிகிறது?
காதல் கடல்
என ஆரம்பித்து
தீப்பெட்டி அளவில்
முடிக்கிறாய்?
ஏகலைவன்
வில்லுக்கு
கட்டை விரல்தான்
கொடுத்தான்
நான்
உன் சொல்லுக்கு
என்னையே கொடுப்பேன்,
என்ன சொல்ல போகிறாய்?