யுகயுகமாய் சுற்றுகிறது பூமி
எதனுடனும் மோதி நொறுங்கிவிடாமல்;
பிரபஞ்சமும் சுருங்கி விரிகிறது
பெரிய நுரையீரலைப்போல;
பெயர் தெரியாத கோடி விண்மீன்கள்
தோன்றி தொலைந்துவிட்டன;
கோடி கோடியாய் மனிதவுயிர்கள்
பிறந்து எங்கோ போய்விட்டன;
இருளும் வெளிச்சமும் நினைக்க முடியாத
தொலைவுகளிலும் கட்டி புரள்கிறது;
வார்த்தைகளில் வராத உண்மைகள்
இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன
உன்னையும் என்னையும் போல.
புரிந்து கொள்ள முடியாத பேரதிசயத்தில்
தெரிந்து கொள்ளமலே வாழ்கிறோம்.