தேடாதீர்கள்…
சிற்பங்களை தேடாதீர்கள்
ஒவ்வொரு கல்லும்
சிற்பத்தை சுமக்கிறது!
ஓவியம் கண்களில்தான்
ஒளிந்திருக்கிறது!
இசை மௌனங்களில்
நிறைந்திருக்கிறது!
கவிதைகள் பேனாவில்
காத்திருக்கின்றன!
முடிவிலாமல் பிரபஞ்சம்
நம்மை
அன்பு செய்கிறது…
வாருங்கள்,
வாழ்க்கையின் பாதைகள்
நம்மை அழைத்துக்கொண்டே
இருக்கின்றன…
