தொடுவானம் தொடாத விரல்

மே 1, 2008

இது பாவஞ்செஞ்ச பூமி!-மே தினம்

கோப்பு வகை: வாழ்க்கை — kannan824u @ 4:50 நான்
Tags: ,

நாங்கள் உழைக்கிறோம்
யாருக்காக??
ஆச மவன்,
அடுத்து படிக்க
ஆச மட்டுந்தான் இருக்கு
காசு இல்லை!
நான் பெத்த
மல்லிக,
தெருவில் விற்கிறாள்
மல்லிக!
பஸில போர்டு
வாசிக்காத
காதல் மனைவி!
இன்றைக்காவது
சாவ மாட்டேனா?
என்ன பெத்த
மவராசி!
சொல்லுங்க
வலிய மறந்து
உழைக்கிறோம்,
மனசின் காயங்களுக்கு
மருத்துவத்தில் என்ன
மருந்து?
நீங்க
என்ன செயதீக?
சாதி சொல்லி
சண்ட வளத்தீக!
சமயம் சொல்லி
குண்டு வெடிச்சீக!
மொழியை சொல்லி
குடிக்கிற
தண்ணி அடைச்சீக!
போதுஞ்சாமி,போதும்
இது பாவஞ்செஞ்ச பூமி!

மறுமொழிகள் ஏதும் இல்லை »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.