Archive for April, 2008

நீ என்ன கேட்க போகிறாய்?

சாபங்களையே சந்தித்தவன்
வரந்தர வந்தவளையே
வரமாக கேட்டு விட்டான்,
இறகுகள் வேண்டாமென
சிறகுகளையே கேட்டு விட்டான்,
கவிதைகள் வேண்டாமென
கலைமகளையே கேட்டுவிட்டான்,
மேகங்கள் வேண்டாமென
வானத்தையே கேட்டுவிட்டான்
விளக்குகள் வேண்டாமென
விண்மீன்கள் கேட்டுவிட்டான்,
நான் வேண்டாமென
வரம் வாங்க வந்தவனிடம்
நீ என்ன கேட்க போகிறாய்?

Leave a Comment

காற் புள்ளியும் கனவும்!

நான்
இங்கு
வார்த்தைகளோடு,
நீ
அங்கு
எண்ணங்களோடு,
பரிமாறிக்கொள்ள
முகாந்திரமில்லாமல்
தேடுகிறோம்
நான்
காற் புள்ளியையும்,
நீ
கனவையும்!

Leave a Comment

தேடலும் தேய்தலும்!

சுட்டு விரல்
பற்றி
தொடங்கிய பயணம்,
உள்ளங்கை தேடி
அலைகிறது!
உள்ளந்தானடி
தேய்கிறது
அது
உனக்கெங்கே
புரிகிறது!

Leave a Comment

நான் எங்கிருந்தாலும்!

நான்
எங்கிருந்தாலும்
உன்னை
பார்க்க முடிகிறது,
நீ
என் வானம்!
நான் எங்கிருந்தாலும்
உன்னை
கேட்க முடிகிறது,
நீ
உயிர்களின் ஓசை!
நான்
எங்கிருந்தாலும்
உன்னை
பேச முடிகிறது,
நீ
என் பாஷை!
நான்
எங்கிருந்தாலும்
உன்னை
தொட முடிகிறது,
நீ
என் காற்று!
நான்
எங்கிருந்தாலும்
உன்னை
எழுத முடிகிறது
நீ
என் கவிதை!
நான்
எங்கிருந்தாலும்
வாழ முடிகிறது,
நீ
என் உயிர்!

Leave a Comment

எங்கே பிரபஞ்சம்?

என் இரவுகள்
உனக்கான கவிதைகளில்
நீண்டு பெருமூச்சிடுகிறது!
சொல்ல முடியாத
ஊமை வார்த்தைகள்
உயிர் குடித்து
உள்ளமெங்கும்
கிளை  பரப்புகிறது!
ஊழிப் பயணத்தின்
உறு துணையாய்
உன் கரம் பிடித்து
கரையேற துடிக்கும்
பாவக்கனவுகள்!
இருளின் பார்வை
தேகத்தில் படர
திறந்திருந்த மனக்கதவை
தேடியலைகிறது
அடிமைப்பட்ட உணர்ச்சிகள்!
யுகங்களின் வழியே
வழிந்தோடுகிறது
உண்மையின் சிற்றோடை
எங்கே பிரபஞ்சம்?
எங்கே நீ?
எங்கே நான்?

Leave a Comment

காத(நாம்)லுக்குள்!

உனக்குள் நான்!
எனக்குள் நீ!
நமக்குள் காதல்!

Leave a Comment

காதல் மழை!

உனக்காக நானும்
எனக்காக நீயும்
காத்திருந்தோம்
காதல் வந்த பிறகும்
பேசாமல்,
மழைக்காக காத்திருந்தவர்கள்
குடைப் பிடிப்பதில்
நியாயமில்லை!

Leave a Comment

பேசிப் பழகு!

பேசித்தான் பழக
வேண்டுமா?
நான்
மட்டும்
உன்னிடம்
பழகிய பிறகு
பேசிக்கொள்கிறேனே?

Leave a Comment

இரண்டாவது பிறப்பு!

உனக்கு குழந்தைகள்
பிடிக்குமென தெரிந்தவுடன்
மறுபடியும்
பிறந்துவிட்டேன்!
மறந்துவிடாதே,
குழந்தையாகவே
இருந்துவிடப்போகிறேன்!

Leave a Comment

பூக்களும் காயம் செய்யும்- வைரமுத்து

போடி போடி கல்நெஞ்சி!
மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு
ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!
காதல் தானடி
என்மீதுனக்கு?
பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?
தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?
நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?
இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்
இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -
என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -
வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -
சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்
வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -
நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.
சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?
நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்
உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்
இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி.

நல்லவேளை வடுகப்பட்டிக்காரன் எழுதிவிட்டான் இந்த கவிதையை இல்லை தமிழ் நாட்டில் காதல் வசப்பட்ட காளையரெல்லாம் வார்த்தைகளை தேடியே தூக்கம் தொலைத்திருப்பர்..இது நான் தூங்குமுன் எழுதிய கவிதை

முற்றத்தில் கோலமிட்டாய்,
ஆனால்
மனதில்  பூட்டு போட்டாய்,
பிரியம் உரைக்காமல்
புதிர் போட்டாய்!
தள்ளி நின்று தவிப்பதும்
தவணை முறையில் சிரிப்பதும்
கிட்ட நிற்பது தெரிந்தும்
எட்ட பார்ப்பதும்,
பக்கம் வந்தால்
பவிசாக விலகுவதும்,
இன்னும் எத்தனை நாட்களுக்கு
இப்படி
உண்மைகளை கட்டிபோட்டுவிட்டு
கனவுகளை கட்டவிழ்த்துவிட
தீர்மானித்திருக்கிறாய்?
எரிமலையாய் எரிந்தவனை
பனிமலையாய் மாற்றிவிட்டு
உயிர் நடுங்கி உலர்கிறாய்!
ஓவியமே உனக்காக
ஒரு காவியமே
பாடிவிட்டேன்
நீயோ
காது கேளதவளாய்
கால் போன போக்கிலே..
காதலோடு காத்திருக்கிறேன்
கவிதை தந்தவள்
காதலும் தருவாளென்று..

Comments (2)

Older Posts »