நான் விரும்பும் பேய்கள்… (3)

February 29, 2008

உங்கள் கனவுகளில் வருகின்ற பேய்கள் என்ன செய்கின்றன என்பதை கவனித்திருக்கிறீர்களா? பேய்களுக்கு மனிதர்கள் அளவுக்கு முகபாவனைகள் தெரியாதோ என்னவோ? எப்போதும் ஒரே மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு நம்மை பயமுறுத்தும்,ஒருவேளை ஒரே மாதிரி இருப்பதால்தான் பயங்கரமாக தெரிகிறதோ?.நானும் அப்படித்தான் ஒரு வித்தியாசமான பேய்க்கனவில் பயந்து அலறி விட்டேன்.என் அப்பா எனக்கு திருநீறு பூசிய பிறகு,சிறிது தண்ணீர் குடித்துவிட்டு படுத்தேன்.

யாருமற்ற, பனை மரங்கள் நிறைந்த ஒரு காட்டுக்குள் நான் மட்டும் ஓடுகிறேன்,எதிரே இருக்கும் பெரிய குளத்தில் அடக்கடவுளே!,கருப்பு நிற அன்னங்கள் என் மூச்சே நின்று விடும் போல இருந்தது.பின்னே விரட்டுவது யார் எனத் தெரியாமல், திரும்பி பார்க்கும் தைரியமும் இல்லாமல், மூச்சிரைக்க ஓடினேன். ஆம், என்னை யாருமே விரட்டவில்லை நானேதான் ஓடி கொண்டிருக்கிறேன் ஆளரவமற்ற அந்த ஒத்தை வீட்டை நோக்கி என நினைத்த மாத்திரத்தில்..கிட்ட தட்ட உயிர் போய்விட்டது.
ஒருமுறையாவது என் அப்பாவை கூக்குரலிட்டு அழைத்து விடவேண்டுமென்று துடித்தேன்.நாக்கு வறண்டு விட்டிருந்தது.கண்களை கட்டிக்கொண்டு வந்தது.கால்கள் பின்னிக்கொண்டன. கடைசி முறையாக நான் உயிரை பிடித்து கத்தியபோது என்னை தவிர வீட்டில்  எல்லோரும் எழுந்திருந்தனர்.

தினமும் என் கனவில் பேய்கள் வந்தவாறே இருந்தன.உடைமரங்கள் நிறைந்த காட்டில், மரங்களை விட சற்று உயரத்தில் பறந்து கொண்டிருப்பேன்.வழக்கம்போல பேய்கள் என்னை துரத்தும்.பிறகு சற்று நேரத்தில் ஊரே பிரளயம் வந்தது போல் மழை வெள்ளத்தில் மிதக்கும்.தண்ணீரில் பல வண்ணங்களில் சேலைகள் மிதந்து செல்லும்,ஒவ்வொன்றும் ஒரு உயிருள்ள பாம்பை போல நெளிந்து நெளிந்து செல்லும்.ஒரு வெள்ளை நிற குதிரையில் நான் ஏறி காற்றை விட வேகமாக செல்ல… பொழுது விடிந்திருக்கும்.வெளிச்சத்தில் பேய்கள் வராது என்பது எனது அன்றைய நம்பிக்கை..

பேய்கள் உலாவும்…

vampire-eyes-sm1.jpg


அசுர வதம்!

February 28, 2008

ஏனப்படி
பார்க்கிறாய்?
அசுர வதம்
தெரியும்
இது
என்ன
அசத்துற வதமா?

mac_ungaro08.jpg


தொலை(த்)தல்!!!

February 27, 2008

விறகு வெட்டிக்கு
தங்க கோடாரி
தந்த தேவதை
மறைந்துவிட்டிருந்தபோது
விறகு வெட்டியே
தொலைந்திருந்தான்!

2ja.jpg


பேய் படம்

February 26, 2008

கதாநாயகி
விரல்
நகத்திற்கு
பதிலாய்
விரலையே
கடித்து துப்பி விட்டாள்!

celebrities_female_266.jpg


முத்தம்

February 25, 2008

Simple இருந்த நான்
உன்னை காதலித்த பின் Simbu* ஆனேன்

* உதட்டை கடிகறதல


மழை!

February 25, 2008

மழை
நின்றவுடன்
அழும்
மரங்களை
போல்
நான்….
நீ சென்றவுடன்!


நான் விரும்பும் பேய்கள்…. (2)

February 25, 2008

இருளையும்,வெளிச்சத்தையும் போல பேய்களும்,கடவுள்களும் அன்று எனக்குப்பட்டது.
என் வியப்பு இன்னும் அதிகமாகியது பேய்கள் எல்லா ஊரிலும் நீக்கமற நிறைந்திருப்பது தெரிந்தவுடன்.உள்ளூரில் இருந்த சாதாரண பேய்கள்,முண்டம்,முனி,மோகினி,இசக்கி,இரத்த காட்டேரி போக வெளி நாட்டு வேம்பைர்(Vampire),டிராகுலா,சாத்தான்,லூசிபர் மற்றும் 666 இலச்சினை பொறித்த அந்தி கிறிஸ்து என பேய்கள் மனிதன் இருக்கும் திசைகளில் எல்லாம் தன் கோர பற்களை காட்டி சிரித்து கொண்டிருந்தன.

எனக்கு இருந்த சந்தேகமெல்லாம் இதிகாசங்களில் வரும் அரக்கர்களும்,அரக்கிகளும்
இந்த பேய்களோடு தொடர்புடையவர்களா? என்பதுதான்.எனது இஷ்ட தெய்வமாயிருந்த கிருஷ்ணனை கொல்ல துணிந்த பூதகி சாதரண கொலைகாரியா? இல்லை துர்பலம் கொண்ட பேயா?.இரணிய கசிபுவும்,மகா பலியும்,இராவணனும் நல்லவர்கள், சிவபக்தர்கள் பிறகெப்படி பேய்களாக இருக்க முடியும்.அதற்கு மேல் என்னால் சிந்திக்க முடியவில்லை.போதாக்குறைக்கு சிவகணங்கள் வேறு தன் பங்குக்கு என்னை குழப்பியிருக்கிறது.

இதையெல்லாம் விட பேய்களுடன் பேசுவோர் பற்றிய செய்திகள் நிறைய வந்த வண்ணமாகவே இருக்கும். கிராமத்தில் நடக்கும் கோயில் கொடைகளில்(திருவிழா)
சாமியாடிகள் பேய் பிடித்தவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மிகவும் பயம் வரவழைக்கும். அப்படி பட்டவர்களை சாட்டையால் அடிப்பது, உள்ளங்கையில் சூடனை கொளுத்துவது என கொடுமைகள் நடக்கும்.ஏற்படும் வலியோ,வேதனையோ,காயமோ பாதிக்க பட்டவரை ஒன்றும் செய்யாது அது பேய்களுக்கு விழுகின்ற அடி,உதை,தீக்காயம் என்பதால்.நானும் அவ்வாறான பேய் விரட்டும் நிகழ்ச்சிகளை பார்த்து வெலவெலத்து போயிருக்கிறேன்.குறிப்பாக பேய்பிடித்தவர்களை விட்டு வெளியேறும் அந்த ஆவி(இப்படியும் பேயை அழைக்கலாம்) அருகில் இருப்பவரின் உடலில் புகுந்துவிடும் அபாயம் அதிகமென்பதால் சற்று ஒளிந்தே நின்றிருப்பேன்.

பேய்கள் உலாவும்..

vampire-eyes-sm1.jpg


உன் பெயர்…

February 23, 2008

எழுதி,
எழுதி
கிழித்தேன்
உன்
பெயரை விட
எந்த
கவிதையும்
அழகாய் இல்லையென்று…

name.jpg


என்னைத் தேடி!

February 23, 2008

என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடுமுன் செய்தி அனுப்பு

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வரத் தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்துக் கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவைக் கொல்கிறேன்

(என்னைத் தேடி)

யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
உன் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ
ஒரு பகல் என சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா
இலையை போல் என் இதயம் தவறி விழுதே

(என்னைத் தேடி)

கேட்டு மகிழுங்கள்


நான் விரும்பும் பேய்கள்..

February 23, 2008

பேய்களை பற்றிய கதைகள் எப்பொழுதுமே சுவாரஸ்யமானவை… சிறு வயதில் இரவில் சொல்லப்பட்ட அத்தனை பேய்க்கதைகளும் ரத்த கறை படிந்தவை… சில பேய்கள் புதையல்களை காத்தபடி காலந்தள்ளி கொண்டிருப்பதையும்… சில பேய்கள் நான் குளிக்க போகும் கிணற்றில் அமாவஷை, பௌர்ணமி தினங்களில் தலைக்கு குளித்து விட்டு கூந்தலை விரித்து விட்டபடி… அழுதுகொண்டோ அல்லது பலமாக பேய் சிரிப்பு சிரித்த படியோ உட்கார்ந்து கொண்டிருப்பதையோ கேள்விப்பட்டிருக்கிறேன். . சில நாட்களுக்கு அந்த கிணற்று பக்கம் போக மாட்டேன் என்று என் தாயார் என்னிடம் கூறியதாக கூட இருக்கலாம்.. ஆனால் அந்த கிணற்றில் குளிக்கும்போது கண்களை மூடுவதற்கு சற்று பயமாகவே இருக்கும்..

அதுவும் கிணற்றுக்கு மேலே இருந்து குதித்து தலை தண்ணிக்கு வெளியே வரும் வரைக்கும் உள்ளே உலவுகிற பேய் காலை பிடித்து இழுத்து விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.. பள்ளிக்கூடத்திற்கு பின்னால் இருக்கும் கல்லறை கிணற்றில் தண்ணீர் எப்பொழுதுமே வற்றுவதில்லை… கோடையில் கூட பால் மாதிரி தண்ணீர் ததும்பிக்கொண்டிருக்கும்… அதற்கு காரணம் கல்லறையிலிருந்த பேய்கள்தான்.. நான் அந்த பக்கம் தலை வைத்துக்கூட படுப்பதில்லை..எபோழுதாவது கிரிக்கெட் விளையாட போகும்பொழுது கல்லறை தோட்டத்தை பார்ப்பதுண்டு.. அரளி பூக்கள் சிரித்தபடி இருக்கும்… அதுகூட பயப்படுத்தும்படியாகவே இருக்கும்.. அரளி விதை விஷம் என்பதுதான் காரணம்.. கல்லறை என்பதற்காக பூக்கள் கூடவா அரளிப்பூகளாக இருக்க வேண்டும்.. பேய்கள் அப்படிப்பட்ட இடங்களை விரும்புவதாகவே தோன்றியது..

சினிமா தியேட்டருக்கு அருகில் இருந்த ஒத்த பாலம் கூட பேய்கள் அமர்ந்து கதை பேசும் இடமாக இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை.. அங்கே ஒரு மோகினியும், சில
இரத்த காட்டேரிகளும் இருப்பதாக சொன்னார்கள்.. நம்பத்தான் வேண்டியிருந்தது.. ஏனெனில் எங்கள் ஊரில் நடந்த இரட்டை கொலைகளில் ஒன்று அங்கே நடந்ததாக செய்தி..பின்னிரவு காட்சிகளை நான் காணமல் இருந்ததற்கு அந்த பேய்கள்தான் காரணம்
மற்றபடி சைக்கிளில் நான் செல்லும்பொழுது அந்த பாலம் ஒரு கொலைக்களமாகவே தெரியும் மிக மெதுவாகவே செல்லுவேன் .. இருந்தும் ஒருமுறை கீழே விழுந்து என் கீழுதட்டின் கீழே ஒரு ஓட்டை விழுந்து விட்டபின் என்னை அந்த பேய்கள் பதம் பார்த்துவிட்டதாகவே தோன்றியது..

பேய்கள் உலாவும்.

.vampire-eyes-sm1.jpg